Posts

Showing posts from October, 2023

கட்டுரை

  வில்லுப்பாட்டின் கதையமைப்பும் இசைக்கருவிகளும் ஆய்வுச் சுருக்கம் வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் வில்லுப்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் வில்லானது ஆரம்ப காலக்கட்டத்தில் முற்றிலும் பனை மரத்தாலேயே செய்யப்பட்டது. நடுவில் தடிமனாகவும், இரண்டு ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் இந்த வில்லின் ஓரங்களில் நாண் ஏற்றப்பட்டு, மணிகள் தொங்கவிடப்பட்டு இசைக்கப்படுகிறது. இந்த வில்லுடன், கடம், ஜால்ரா போன்றவை பக்க வாத்தியமாக இருந்தாலும், பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிலுக்கு கொண்டு சென்று மேடையை தெய்வீகமயமாக்கியது உடுக்கை என்ற இசைக்கருவிதான். ஆனால், தற்போது அரங்கேற்றப்படும் வில்லுப்பாட்டில் உடுக்கை பயன்படுத்துவது இல்லை மாறாக தபேலா, ஆர்மோனியம், பம்பை போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வில்லுப்பாட்டுக் கலையம்சம் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது. முன்னுரை வில்லிசை, வில்லுப்பாட்டு, வில்லடிச்சான் பாட்டு, விற்பாட்டு என்ற பெயர்களில் வழங்கும் இக்கலையானது பதினைந்தாம் நூற்றாண்டில் அரசப் புலவர் என்பவர்தான் தோற்றுவித்த...