நிறுத்தற்குறிகள்
நிறுத்தற்குறிகள் வாக்கியங்களை அமைத்து எழுதும்போது, நிறுத்த வேண்டிய இடங்களில், சில குறிகளை (அடையாளங்களை) இட்டு எழுதுகிறோம். அப்போதுதான் படிப்பவர்கள், நிறுத்த வேண்டிய இடங்களில், நிறுத்த வேண்டிய அளவுக்கு, குறிகளால் தெரிந்து கொண்டு, நிறுத்திப் படிப்பார்கள். இவ்வாறு, பொருள் எளிதில் விளங்குமாறு, எந்த எந்த இடங்களில் எந்த எந்த அளவு நிறுத்திப் படிக்க வேண்டும் என அறிவிக்கும் குறிகளே 'நிறுத்தக் குறிகள்' எனப்படும். 1. காற்புள்ளி (,) 2. அரைப்புள்ளி( ; ) 3. முக்காற்புள்ளி (:) 4. முற்றுப்புள்ளி ( . ) 5. வினாக்குறி (?) 6. உணர்ச்சிக்குறி (!) 7. பிறை அடைப்புக்குறி ( ) 8. ஒற்றை மேற்கோள்குறி (‘ ’) 9.இரட்டை மேற்கோள்குறி (“ ”) 1. காற்புள்ளி (,) 1) பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும். அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர். ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன். இ) ஆடுகள்...