நிறுத்தற்குறிகள்

 

நிறுத்தற்குறிகள்

வாக்கியங்களை அமைத்து எழுதும்போது, நிறுத்த வேண்டிய இடங்களில், சில குறிகளை (அடையாளங்களை) இட்டு எழுதுகிறோம். அப்போதுதான் படிப்பவர்கள், நிறுத்த வேண்டிய இடங்களில், நிறுத்த வேண்டிய அளவுக்கு, குறிகளால் தெரிந்து கொண்டு, நிறுத்திப் படிப்பார்கள். இவ்வாறு, பொருள் எளிதில் விளங்குமாறு, எந்த எந்த இடங்களில் எந்த எந்த அளவு நிறுத்திப் படிக்க வேண்டும் என அறிவிக்கும் குறிகளே 'நிறுத்தக் குறிகள்' எனப்படும்.

1. காற்புள்ளி (,)

2. அரைப்புள்ளி( ; )

3. முக்காற்புள்ளி (:)

4. முற்றுப்புள்ளி ( . )

5. வினாக்குறி (?)

6. உணர்ச்சிக்குறி (!)

7. பிறை அடைப்புக்குறி ( )

8. ஒற்றை மேற்கோள்குறி (‘ ’)

9.இரட்டை மேற்கோள்குறி (“ ”)

 

1. காற்புள்ளி (,)

1)           பொருட்களைத் தனித்தனியே கூறும்போது காற்புள்ளி இடவேண்டும்.

அ) தாய், தந்தை, தமையன், தங்கை என்னும் நால்வர் வீட்டில் உள்ளனர்.

ஆ) நான் வங்கிக்குச் சென்று, பணத்தை எடுத்து, பின்பு கடையில் சில பொருட்கள வாங்கிக் கொண்டு, வரும்வழியில் கோவிலுக்கும் சென்றுவந்தேன்.

இ) ஆடுகள், மாடுகள், நாய்கள், கோழிகள் ஊரில் வாழ்கின்றன.

2)           விளிப்பெயர்களை அடுத்து, காற்புள்ளி இடவேண்டும்.

அ) ஆருயிர்த் தந்தையே, வணக்கம்

ஆ) இன்பத்திலும், துன்பத்திலும் இணைபிரியா நண்பரே, வருக.

3) வினை எச்சத்திற்குப்பின் பொருள் விளக்கத்தைக் கருதி, காற்புள்ளி இடவேண்டும்.

அ) கண்ணன் அண்ணனைப் பார்த்து, ‘ உங்கள் வரவை நெடுநேரம் எதிர்பார்த்து நிற்கின்றேன்என்றான்.

ஆ) ஒருவன் நன்றாகப் படித்து முடித்தபின், பரீட்சைக்குப் பயப்படமாட்டான்.

4) இணைமொழிகளுக்கு இடையில் காற்புள்ளி இடவேண்டும்.

அ) மேலோர் கீழோர், அரசன் ஆண்டி என்ற பாகுபாடு காலனிடம் இல்லை.

5) ஆனால்,ஆயின், ஆகையால், எனவே,  போன்ற சொற்களுக்கு முன் காற்புள்ளி அவசியம்.

அ) கந்தன் மிக நல்லவன் ; ஆனால் , அவன் படிப்பில் குறைந்தவன்.

ஆ) வள்ளுவர் மிகச் சிறந்த ஞானியே; ஆனால் அவர் தம்மை உலகிற்கு அறிவிக்காமல் போனது பெருங்குறையே.

இ) இளமையில் கல்வி சிலையில் எழுத்து; ஆகையால், சிறுவயது தொட்டே சிரத்தையுடன் கல்விகற்கவேண்டும்.

2. அரைப்புள்ளி( ; )

1) பல செயல்களைக் குறிக்கும் ஓர் எழுவாய் வரும்போது அரைப்புள்ளி இடவேண்டும்.

அ) கோவலன் கொலையுண்டதைக் கேட்ட கண்ணகி எழுந்தாள் ;  மதுரை மாநகர் வீதி வழியே சென்றாள் ; அரண்மனை வாயிலை அடைந்தாள் ; காவலனிடம் தன் கருத்தை விளக்கினாள் ; அரசன் ஆணையால் அவனைக் கண்டாள்.

ஆ) பண்டை இலக்கியங்கள் அனைத்தும் சிறந்தனவே; ஆனால், அவை எளிய நடையில் அமைந்தன என்று கூறல் இயலாது.

3. முக்காற்புள்ளி (:)

1)சொற்றொடரில் கூறிய ஒன்றை விரித்துக் கூறும்போது முக்காற்புள்ளி இடவேண்டும்.

அ) பால் ஐந்து வகைப்படும்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால்,பலவின்பால் என்பன.

ஆ) பொருள் கூறுக: கோன், மஞ்சு, குஞ்சரம்.

இ) முத்தமிழ்: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்.

4. முற்றுப்புள்ளி ( . )

1)சொற்றொடர்கள் பொருளால் முற்றுப்பெற்றல் என்பதை அறிவிக்க முற்றுப்பெறல் என்பதை அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

அ) அன்பும் பண்பும் அமைந்ததே இல்வாழ்க்கை.

ஆ) நான் நேற்று என் பிறந்தநாளைக் கொண்டாடினேன்.

2) சொற்குறுக்கத்தையும் (திரு.) பெயர்க்குறுக்கத்தையும் (ம.ப.பா.) அறிவிக்க முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.

5. வினாக்குறி (?)

உதாரணம்: இன்று தேர்வு இருக்கிறதா?

அகல் விளக்கு புதினம் எழுதியவர் யார்?

வினாக்களுக்குப் பிறகு இடப்படும் குறி வினாக்குறியாகும்.

6. உணர்ச்சிக்குறி (!)

1)மகிழ்ச்சி, வியப்பு, அச்சம், அவலம், இரங்கல் போன்ற உணர்ச்சி உரைகளுக்குப் பின் உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.

எப்படி நீ கம்பத்தின் மேல் ஏறினாய்! - வியப்பு

அய்யோ பரிதாபம்! – இரக்கம்

பாம்பு! பாம்பு! - அச்சம்

பணம் தொலைந்து போனதே! - அழுகை

தம்பி! அங்கே பார். - விளித்தல்

உன்னை ஒருகை பார்க்காமல் விடமாட்டேன்! – சினம்

வியப்பு, இரக்கம், அச்சம், அழுகை, விளித்தல், சினம் முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுவதை விளக்கும் சொற்களுக்குப் பிறகு உணர்ச்சிக்குறி இடப்படும்.

7.பிறை அடைப்புக் குறி ( )

பிறை அடைப்பு : ஒன்றனை விளக்க மற்றொரு சொல்லைப் பிறை அடைப்புக்குள் குறிப்பது உண்டு.

எடுத்துக்காட்டு : பாரதியார் நுழைவுத்தேர்வில் (entrance examination) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

பிறை அடைப்பு சொற்றொடரின் இறுதியில் வந்தால் பிறை அடைப்புக்குப் பிறகு புள்ளி வைக்க வேண்டும்.

எடுத்துக்காட்டு : குற்றங்கள் மூன்றாவன : இணைவிழைச்சு (காமம்), வெகுளி (குரோதம்), மயக்கம் (மோகம்).

முழுச் சொற்றொடரும் பிறை அடைப்புக்குள் இருப்பின் முற்றுப் புள்ளியையும் பிறைஅடைப்புக்குள் இட வேண்டும்.

எடுத்துக்காட்டு : நான் முதன்முதலாகச் சென்ற வெளியூர் திருப்பெருந் துறையாகும். (அது இக்காலத்தில் ஆவுடையார் கோயில் என்று வழங்கப் படுகின்றது.)

பிறை அடைப்புக்குள் மேலும் பிறைஅடைப்பு தேவைப்பட்டால், பகர அடைப்பு இடவேண்டா; பிறை அடைப்பையே பயன்படுத்தலாம்.

8.ஒற்றை மேற்கோள் குறி ( ‘ ’)

இரட்டை மேற்கோள் குறிகளுக்கு இடையில் மேற்கோள் வரும்போது ஒற்றை மேற்கோள் குறி

இடுதல் வேண்டும். எழுத்துக்களையோ சொல்லையோ, ஒருவர் கருத்தில் சிறு பகுதியையோ எடுத்தாளும்போது ஒற்றை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.

(அ)  ‘அ, இ, உ      இவை மூன்றும் சுட்டெழுத்துக்கள்.

9.இரட்டை மேற்கோள் குறி (“ ”)

பொன்மொழிகளை மேற்கோளாகக் காட்டும்போதும், நேர்கூற்றிற்கு முன்னும் முடிவிலும், இரட்டை மேற்கோள் குறி இடுதல் வேண்டும்.

அறஞ்செய்ய விரும்புஎன்று ஒளவையார் கூறியுள்ளார்.

10.இடைப்பிறவரல் வைப்புக் குறி

இடைப்பிறவரல் வைப்புக் குறி : இக் குறி ஒரு சிறு சொற்றொடரின் முன்னும் பின்னும் உள்ள சிறு கோடுகளைக் குறிக்கும். கூறுகின்ற சொற்றொடரின் நடுவில் இலக்கண முறையில் தொடர்பில்லாது, இடைப்பிறவரலாக வரும் தனிச் சொற்றொடரைப் பிரிக்க இக்குறி இடப்படும்.

எடுத்துக்காட்டு : இறுதியாக – சுருங்கக் கூறுமிடத்து – நாங்கள் வீட்டுக்கே திரும்பி வந்தோம். 

செய்யுளில் நிறுத்தக்குறிகள் இடுவது பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. இருந்தபோதிலும், எளிதில் புரிந்து கொள்ள இயலாதாருக்கு உதவியாக தேவை நேருமிடங்களில், பொருத்தமான குறிகளை இடலாம். எனினும், ‘நிறுத்தக் குறிகளை மூலத்துள் நுழைப்பது முறையன்று; சொல் பிரிக்கையில் அடைப்புக் குறிக்குள் சந்திகளை நுழைப்பதும் முறையன்று; சீர் ஒழுங்கைக் குலைத்து அச்சிடுவது, பாவடிவை மாற்றும்’ என்று கூறுவாரின் கவலையைப் புறக்கணிக்கணித்தல் தவறாகும்.

Comments

Popular posts from this blog

கட்டுரை